விஜய் டிவியின் செல்ல பிள்ளை என்று சொல்லும் அளவிற்கு பல வருடங்களாகவே விஜய் டிவியில் தொடர்ச்சியாக தொகுப்பாளராக பணியாற்றி வரும் டிடி, பலமுறை சிறந்த தொகுப்பாளர்களுக்கான விருதுகளை பெற்றவர்.
அதனாலேயே இவருடைய திவ்யதர்ஷினி என்ற பெயரை மறந்து பலர் இவரை டிடி என்றே அழைக்கின்றனர்.
தொகுப்பாளராக பலருக்கும் தெரிந்த டிடி என்ற திவ்யதர்ஷினி பலருக்கும் முன் மாதிரியாக இருந்து வருகிறார்.
ஆனால் சில வருடங்களுக்கு முன்பு தன்னுடைய நண்பரையே காதலித்து திருமணம் செய்திருந்தார். சில மாதங்களுக்குள் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்து விட்டது.
இருப்பினும் டிடி எதனால் விவாகரத்து செய்தார் என்பது யாருக்குமே தெரியாது. இது குறித்து சமூக வலைத்தளத்தில் பெரிதாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சினிமா விமர்சகரான பைல்வான் ரங்கநாதன் டிடியும் சிறிகாந்த் ரவிச்சந்திரனும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்குள் bodyment க்காக திருமண பந்தத்தில் இணைந்து கொண்டதாகவும், இருவருமே உடலை மட்டுமே விரும்பியதாகவும், அந்த தேவை முடிந்த பிறகு விவாகரத்து என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.
எது எப்படி இருந்தாலும் ஒரு கணவன் மனைவியின் விவாகரத்து முடிவானது அவர்களின் மனசாட்சிக்கு மட்டுமே தெரிந்த மிகப்பெரிய உண்மை என பலரும் கருத்து கூறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.