Post

Share this post

இலங்கைக்கு ஏற்பட்டுள்ள புதிய ஆபத்து!

தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
மிகக் குறைந்த நீர் உள்ள இடங்களில் குளிப்பதும், மீன்பிடிப்பதும் இந்த நோய்களுக்கு வழிவகுக்கும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
குறைந்தளவு நீர் உள்ள இடங்களில் குளிப்பதன் மூலம் தோல் நோய்கள் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக உபுல் ரோஹன வலியுறுத்தியுள்ளார்.
குடிநீர் விற்பனை செய்யும் இடங்கள் தொடர்பில் உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குறிப்பிடுகிறது.
வேறு முறைகளில் கிடைக்கும் தண்ணீரை குடித்தால், நன்றாக சூடாக்கி தண்ணீரையே பயன்படுத்த வேண்டும் என சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Leave a comment