Post

Share this post

வானொலி தொகுப்பாளராக மாறிய அரசியல் பிரபலம்!

கனடாவின் அரசியல் பிரபலமொருவர் தொகுப்பாளராக மாறியுள்ளார்.
ரொறன்ரோ மாகாண முன்னாள் முதல்வர் ஜோன் டோரி, வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர் பணியில் ஈடுபட்டு வருகின்றார்.
நியூஸ்டாக் என்ற நிகழ்ச்சியை டோரி தொகுத்து அளித்து வருகின்றார்.
நிகழ்ச்சி தொகுப்பாளராக கடமையாற்றியுள்ள ஜோன் டோரி, கடந்த 2018ம் ஆண்டின் பின்னர் முழு நேர அரசியலில் ஈடுபட்டதனால் இவ்வாறான நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்கவில்லை.
டோரி ஊடகத் துறையில் நீண்ட அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் ஒருவர் டோரியை மேயர் என விளித்த போது தாம் இப்பொழுது மேயர் கிடையாது என ஜோன் டோரி தெரிவித்துள்ளார்.
ஜோன் டோரி சில மணித்தியாலங்கள் இந்த செய்தி தொடர்பான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார்.

Leave a comment