“உயிருள்ள புழு ஒருவரின் மூளையில் வாழ்வது இதுதான் உலகிலேயே முதல்முறை. ஆனால் இதுபோன்ற மருத்துவ வழக்குகள் எதிர்காலத்திலும் வரக்கூடும்” என்கிறார் மருத்துவ குழுவிற்கு ஆலோசகராக செயல்பட்ட அவுஸ்திரேலியாவின் தலைநகர் கேன்பர்ரா பகுதியில் உள்ள தொற்று நோய் சிறப்பு சிகிச்சை மருத்துவர் டாக்டர். சஞ்சய சேனாநாயக்க.
மருத்துவ துறையில் எத்தனையோ நவீன சிகிச்சை முறைகள் வந்திருந்தாலும், சில அரிய மற்றும் உலகிலேயே புதுவகை நோய்களும், உடல் குறைபாடுகளும் தோன்றி கொண்டே இருக்கும் என இதுகுறித்து முதலில் தகவல் வெளியிட்ட அமெரிக்காவிலுள்ள நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (Centre for Disease Control and Prevention) தெரிவிக்கிறது.