Post

Share this post

ஷாருக்கானை காத்திருந்து பழிவாங்கிய விஜய்சேதுபதி!

‘ஜாவன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது. இதில் நடிகர்கள் ஷாருக்கான், விஜய்சேதுபதி, யோகிபாபு, பிரியாமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பேசிய விஜய் சேதுபதி, “நான் சின்ன வயதில் ஒரு பெண்ணை லவ் பண்ணேன். அவர் ஒரு சேட்டு பெண். ஆனால் அந்தப் பெண் ஷாருக்கானை லவ் பண்ணுச்சு. அதற்கு ஷாருக்கானை பழிவாங்க இவ்வளவு நாள் ஆச்சு. ஷாருக்கான் என்னை நல்ல நடிகன் என சொன்னபோது ஷாக் ஆகிவிட்டேன். அவருடைய நடிப்பையும் வேலையையும் மதிபவன் நான். இந்தப் படத்தை முழுதாக அட்லி எடுத்து வந்தார். ஷாருக்கான் திறமையான நடிகர் மட்டுமல்ல நல்ல மனிதரும் கூட. எல்லோரையும் அன்போடு நடத்தினார். அவரை தமிழ் சினிமாவுக்கு வரவேற்கிறேன்” என்றார்.
இயக்குநர் அட்லி பேசியது, “எல்லோருக்கும் வணக்கம் நண்பா. ‘ஜவான்’ படம் உருவாக காரணமே என்னோட அண்ணன் விஜய் தான். இந்தப் படத்துக்காக அவர் என்னை நிறையவே ஊக்கப்படுத்தினார். எது நடந்தாலும் உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள். நிறைய நெகட்டிவிட்டி வரும். விஜய் சொல்வதை போல, ‘இக்னோர் நெகட்டிவிடி நண்பா’. நம்ம 6 மாசத்துல ஒரு படம் பண்ணி, 7ஆவது மாசம் படத்த ரிலீஸ் பண்ணி ஜாலியா வாழ்ந்துட்டு இருந்தோம். ஆனா ‘ஜவான்’ வாய்ப்பு வந்தது. அதனுடன் சேர்ந்து கரோனாவும் வந்தது. இதனால் படம் முடிக்க நினைத்ததை விட அதிக நாட்கள் தேவைப்பட்டது.
இருந்தாலும் நான் விஜய் ரசிகன் என்பதால் என்றைக்குமே கொடுத்த வாக்கை மீறியது கிடையாது. படம் சிறப்பாக வந்துள்ளது. இசை உலகில் தவிர்க்க முடியாத நபர் அனிருத். கதாநாயகியாக யாரை நடிக்க வைக்கலாம் என யோசித்துக் கொண்டிருந்தபோது நயன்தாரா தான் நினைவுக்கு வந்தார். தற்போது அவர் கேரளாவில் இருப்பதால் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை. நான் வெற்றி பெறலாம் அல்லது தோற்கலாம், ஆனால் தமிழ் சினிமாவை அடுத்தக்கட்டத்துக்கு உயர்த்த எப்போதும் பாடுபடுவேன்” என்றார்.
நடிகர் ஷாருக்கான் பேசுகையில், “என் வாழ்வில் ஒரு படத்துக்கான நிகழ்ச்சியை கூட நான் தமிழ்நாட்டில் நடத்தியதில்லை. ‘ஹே ராம்’ படத்தில் நான் தமிழில் பேசியிருந்தேன். விஜய் சேதுபதியிடமிருந்து நான் நிறைய கற்றுகொண்டேன். விஜய் சேதுபதி நீங்கள் என்னை பழிவாங்கலாம். ஆனால் என்னை விரும்பும் பெண் ரசிகைகளை நீங்கள் எடுத்துகொள்ள முடியாது” என அரங்கை கலகலப்பாக்கினார். மேலும், “அனிருத் என் மகனைப் போன்றவர். ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடலிலிருந்து அனிருத்தை கவனித்து வருகிறேன். ஒரு இந்தி, ஒரு தமிழ் பாடலுக்கு மட்டும் அனிருத்தை இசையமைக்க வைக்கலாமா என அட்லீ கேட்டார். ஏன் ஒரு பாடலுக்கு மட்டும், மொத்தப் படத்துக்கும் அவரே இசையமைக்கட்டுமே என்று நான் தான் சொன்னேன்.
நான் ஷோபி மாஸ்டரிடம் எனக்கு கடினமான ஸ்டெப்பை கொடுக்காதீர்கள் என்றேன். காரணம் நான் விஜய் போல நடனமாட மாட்டேன் என்றேன். ஆனால், என்னையும் நடனமாட வைத்துவிட்டார் ஷோபி மாஸ்டர்” என்றார்.
இதுமட்டுமல்லாது, ஜவான் படக்குழுவினருக்கு தமிழில் பட்டங்களை வழங்கி பேசிய ஷாருக்கான், “நான் தமிழில் அட்லீயை ‘மரண மாஸ்’ என்றுதான் வாழ்த்த முடியும். ‘கம்பீரமான’ முத்துராஜ், ‘விறுவிறுப்பான’ ரூபன், ‘அட்டகாசமான’ விஜய் சேதுபதி, ‘வித்தைக்காரன்’ அனிருத், ‘வசீகரமான’ நயன்தாரா” என பலருக்கும் பட்டப் பெயர் வைத்துப் பேசினார் ஷாருக்.

Leave a comment