Post

Share this post

இலங்கையில் வட்டி வீதங்கள் குறைக்கப்படமாட்டாது!

இலங்கை மத்திய வங்கியின் உத்தரவுக்கு அமைய எந்தவொரு வணிக வங்கியும் வட்டி வீதத்தை குறைக்கவில்லை என தெரியவந்துள்ளது.
குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்துனர்கள் சங்கத்தின் தலைவர் அசங்க ருவன் பொத்துபிட்டிய இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
வட்டி விகிதங்களைக் குறைப்பது தொடர்பான சுற்றறிக்கைகள் சில வர்த்தக வங்கிகளுக்கு கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கான பொறுப்பை மத்திய வங்கி ஆளுநரே ஏற்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்துவோர் சங்கத்தின் செயலாளர் அசங்க ருவன் பொத்துப்பிட்டிய கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment