விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் விரைவில் முடியவுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2018 ஆம் ஆண்டுமுதல் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ஒளிபரப்பாகிவருகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 சகோதரர்களின் குடும்பங்களுக்குட்பட்ட கதையாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.
ஸ்டாலின், சுஜிதா, குமரன் தங்கராஜன், வெங்கட் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் முதன்மை பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இதில் நான்கு சகோதர்களுக்கும் திருமணம் நடைபெற்று அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை காட்சிகளாக அமைத்து வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் நீண்ட நாள்கள் ஒளிபரப்பாகிவரும் தொடரிகளில் ஒன்றாக பாண்டியன் ஸ்டோர்ஸ் மாறியுள்ளது. தொடர்ந்து 5வது ஆண்டாக ஒளிபரப்பாகிவரும் இந்தத் தொடரை முடிக்க விஜய் தொலைக்காட்சி திட்டமிட்டுள்ளது.
இதோடு மட்டுமின்றி பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் இரண்டாம் பாகத்தையும் எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது விஜய் தொலைக்காட்சியில் பெரும்பாலான தொடர்கள் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது. அந்தப் பட்டியலில் விரைவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.