Post

Share this post

ஓடிடியில் ஜெயிலர் படம்!

ஜெயிலர் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் செப்டம்பர் 7-ம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் ஆகஸ்ட் 10 ஆம் திகதி உலகம் முழுவதும் 7,000 திரைகளிலும் தமிழகத்தில் 1,200 திரைகளிலும் இப்படம் வெளியானது.
இந்த படம், முதல் வார முடிவில் உலகம் முழுவதும் 375.40 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது. தொடர்ந்து, இரண்டாவது வார இறுதியில் ஜெயிலர் 14 வது நாளில் ரூ.525 கோடியை கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழகத்தைத் தவிர நாட்டின் பிற மாநிலங்களில் இப்படம் ரூ.200 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஆந்திரம் மற்றும் தெலுங்கானாவில் ரூ.76.85 கோடியும் கர்நாடகத்தில் ரூ.62.9 கோடியையும் கேரளத்தில் ரூ.49.25 கோடி மற்றும் பிற மாநிலங்களில் ரூ.14.6 கோடியையும் வசூலித்துள்ளதாக தகவல். தமிழகத்தில் ஜெயிலர் ரூ.175 கோடியை வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படம் வரும் செப்டம்பர் 7ஆம் திகதி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment