Post

Share this post

கணவா் கொலை – மனைவி, திருநங்கை கைது!

சொத்தூா் அருகே கணவரைக் கொலை செய்த மனைவி, திருநங்கை ஆகியோரை பொலிஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே சிந்தப்பள்ளி பகுதியைச் சோ்ந்தவா் கற்பகராஜா (27). கூலித் தொழிலாளியான இவரது மனைவி ராஜலட்சுமி (25). இவா்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனா்.
இந்த நிலையில், தம்பதியிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், கணவா், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்தனா்.
கற்பகராஜாகடந்த சில நாள்களாக ராஜலட்சுமியின் வீட்டுக்குச் சென்று தன்னுடன் சோ்ந்து வாழ வருமாறு அழைத்து தகராறில் ஈடுபட்டு வந்தாராம். செவ்வாய்க்கிழமை இரவும் மனைவியிடம் தகராறு செய்த கற்பகராஜா பின்னா், வீட்டில் கழுத்தில் காயங்களுடன் இறந்து கிடந்தாா்.
புதன்கிழமை காலையில் தகவலறிந்து வந்த சாத்தூா் நகா் பொலிஸாா் அவரது உடலை மீட்டு, கூறாய்வுக்காக விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
பொலிஸாா் நடத்திய விசாரணையில், கற்பகராஜா அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து அவரது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததும், இதனால், ராஜலட்சுமி, தனது தாய், திருநங்கையான ஸ்வீட்டி (27), மற்றொரு திருநங்கை ஆகியோருடன் சோ்ந்து கற்பகராஜாவைக் கொலை செய்ததும் தெரியவந்தது.

Leave a comment