தமிழ் சினிமாவில் வைரலாகும் பதிவு!

நடிகர் அஜித்தை வைத்து வலிமை, துணிவு ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குநர் அ.வினோத் அடுத்ததாக கமல்ஹாசனின் 233 வது படத்தை இயக்க உள்ளார்.
அரசியல் பின்னணியில் உருவாகும் இப்படத்தின் பணிகள் விரைவில் துவங்க உள்ளன.
இந்நிலையில், அ.வினோத் குறித்து ‘கத்துக்குட்டி’, ‘உடன்பிறப்பே’ ஆகிய படங்களின் இயக்குநர் இரா.சரவணன் தன் முகநூல் பக்கத்தில் ‘அ.வினோத் என்கிற அரக்கன்’ என்கிற தலைப்பில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், “அஜீத் சாரின் ‘துணிவு’ ரிலீஸான நேரம். இயக்குநர் வினோத்துடன் சபரிமலையில் இருந்தோம். நல்ல கூட்டம் என்பதால், அருகே ஓர் அறை எடுத்துத் தங்கினோம். ‘துணிவு’ படம் குறித்த ரிசல்ட் பாஸிடிவ்வாக வந்தாலும், விமர்சனம் குறித்து தெரிந்துகொள்ள அவ்வளவு ஆவல். சபரிமலையில் கவரேஜ் கிடைக்கவில்லை. ‘திங்க் மியூஸிக்’ சந்தோஷ் ஒரு பக்கம், நான் ஒரு பக்கம் என கவரேஜ் தேடி ஓடிக்கொண்டு இருந்தோம். ‘படம் பக்கா…’ என விமர்சனங்கள் வர, அறைக்கு ஓடி வந்தேன். கையைத் தலையணை போல் வைத்துக்கொண்டு, கால் நீட்டித் தூங்கிக் கொண்டிருந்தார் வினோத்.