Post

Share this post

சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் அசோக் செல்வன்!

ரஜினியின் மகள்களான ஐஸ்வர்யா, சௌந்தர்யா இருவரும் இயக்குநர்களாக உள்ளனர். சினிமாவில் தங்களுக்கென தனி அடையாளத்தை உருவாக்கும் முயற்சியில் தொடர்ந்து படங்களை இயக்கியும் வருகின்றனர். ஐஸ்வர்யா லால் சலாம் படத்தை இயக்கி முடித்துள்ளார்.
இந்நிலையில், ரஜினியின் இளைய மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் அமேசான் பிரைம் நிறுவனத்துடன் இணைந்து இணையத் தொடர் ஒன்றை தயாரிக்கிறார். நோவா ஆபிரஹாம் இயக்கத்தில் உருவாகும் இத்தொடருக்கு கேங்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளனர். படப்பிடிப்பிற்கான பூஜை இன்று நடைபெற்றது.
இத்தொடரில் நாயகனாக நடிகர் அசோக் செல்வன் நடிக்க உள்ளதையும் சௌந்தர்யா அறிவித்துள்ளார்.

Leave a comment