Post

Share this post

டென்னிஸ் போட்டியில் எம்.எஸ். தோனி!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் எம்.எஸ். தோனி, பொதுமக்களுடன் அமர்ந்து டென்னிஸ் போட்டியைக் காணும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் அல்கார்ஸ் – அலெக்ஸெண்டர் ஸ்வெரெவ் இடையிலான காலிறுதிப் போட்டியில், பார்வையாளர்களுடன் அமர்ந்து போட்டியைக் கண்டு ரசித்தார்.
அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் போட்டிகள் நடைபெற்று வருகிறது, இன்று (செப். 7) நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீரரான கார்லோஸ் அல்கார்ஸ் ஜெர்மனியின்அலெக்ஸெண்டர் ஸ்வெரெவ் உடன் மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அல்கார்ஸை வீழ்த்தி ஸ்வெரேவ் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
இந்தப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் எம்.எஸ். தோனி பார்வையாளர்களுடன் அமர்ந்து போட்டியக் கண்டு ரசித்துள்ளார். இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a comment