தமிழ் திரையுலகில் குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றவர் மாரிமுத்து. 57 வயதான இவர் இன்று காலை டப்பிங்க் பணிகளை முடித்து விட்டு, வீடு திரும்பும் போது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
ரஜினியின் ‘ஜெயிலர்’ உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ள மாரிமுத்துவின் திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இயக்குனர் வஸந்திடம் உதவியாளராக பணியாற்றிய மாரிமுத்து கண்ணும், கண்ணும், புலிவால் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். 50க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து புகழ்பெற்றவர்.
பரியேறும் பெருமாள், விக்ரம், ஜெயிலர் என பல வெற்றிப்படங்களில் இவரது நடிப்பு ரசிகர்களால் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொலைக்காட்சி தொடர் இவரை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கொண்டு சென்று பெரும் புகழை அளித்தது.