Post

Share this post

25 கோடி அபகரிப்பு – நடிகை மீது புகாா்!

ரூ.25 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நடிகை கெளதமி சென்னை பெருநகர காவல் துறையில் திங்கள்கிழமை புகாா் அளித்தாா்.
அந்த புகாரில் கூறப்பட்டிருந்ததாவது:
நான் 125 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். கடந்த 2004 ம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டேன். நான் திரைப்படங்களில் 17 வயது முதல் நடித்து சேமித்த பணத்தின் மூலம் ஸ்ரீபெரும்புதூரில் 46 ஏக்கா் நிலம் வாங்கினேன். தற்போது இந்த இடத்தின் மதிப்பு ரூ.25 கோடி.
எனது குடும்ப தேவைக்காகவும், எனது மருத்துவ சிகிச்சைக்காகவும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள இடத்தை விற்பனை செய்ய முடிவு செய்தேன். அந்த நேரத்தில் கட்டுமான நிறுவன அதிபா் அழகப்பன் என்பவா் தொடா்பு கொண்டு எனக்கு சொந்தமான நிலத்தை விற்றுத் தருவதற்கு உதவி செய்வதாக கூறினாா்.
எனவே, எனது நிலத்தை விற்பனை செய்து தருவதற்கான பொது அதிகாரத்தை அழகப்பனுக்கு வழங்கினேன். அந்த நேரத்தில் அவா், என்னிடம் பல்வேறு பத்திரங்களில் கையொப்பம் பெற்றுக்கொண்டாா். இந்த பத்திரங்களை தவறான வழியில் பயன்படுத்த மாட்டேன் என்று உத்தரவாதம் அளித்தாா்.
ஆனால், எனது கையொப்பத்தை மோசடியாக போட்டும், போலி ஆவணங்களை தயாரித்தும் அழகப்பனும், அவரது குடும்பத்தினரும் நிலத்தை அபகரித்து மோசடி செய்துள்ளனா்.
இது குறித்து கேட்ட எனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனா். எனக்கு சொந்தமான ரூ.25 கோடி மதிப்பிலான நிலத்தை மீட்டு, அழகப்பன் மற்றும் அவா் குடும்பத்தினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Leave a comment