Post

Share this post

AMA விருது வழங்கும் விழா!

ஆதி மீடியா அக்கடமியின் விருது வழங்கும் விழா கடந்த 27.08.2023 அன்று SLCJ இல் சிறப்பாக நடைபெற்றது. இதன் போது 5 ஆம் பிரிவில் கல்வி கற்று பாடநெறியை நிறைவு செய்த மாணவர்களுக்கான கல்விச்சான்றிதழும், கடந்த 3 வருடங்களாக AMA மற்றும் OOSAI வானொலியுடன் பயனித்தவர்களுக்கான பணப்பரிசுகளும் விருதுகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வை AMA பரிவு 1 இல் கல்வி கற்று சூரிய விருதை (1ஆம் இடம்) வென்ற எஸ். வினோதர்ஷன் மற்றும் AMA பரிவு 2 இல் கல்வி கற்று சூரிய விருதை (1ஆம் இடம்) வென்ற  நியோமி சந்திரபாலன் ஆகியோர் சிறப்பாக தொகுத்து வழங்கியிருந்தனர்.
நிகழ்வின் ஆரம்பத்தில் மங்கள விளக்கேற்றலை தொடர்ந்து AMA பரிவு 2 இல் கல்வி கற்ற மாணவி உஷா தர்மலிங்கத்தின் வரவேற்பு நடனம் இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து AMA நிறுவனத்தின் பிரதம விரிவுரையாளர் எஸ். சரவணபவனின் உரை இடம்பெற்றது.
AMA விருது வழங்கும் விழாவிற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட சிரேஷ்ட ஒலிபரப்பாளரும் தொலைக்காட்சி பிரபலமும் ஆன நாகபூஷணி கருப்பையா அவர்களின் பிரதம அதிதியின் உரை, புதிய அறிவிப்பாளர்களுக்கு மிகவும் உறுதுணையாக அமைந்தது.
இந்நிகழ்வின் சிறப்பம்சமாக கடந்த 3 ஆண்டுகளா AMA மற்றும் OOSAI வானொலியுடன் பயனித்தவர்களில் எம்.பீ. மொஹமட்  அர்ஷாட் 2023 ஆம் ஆண்டின் சிறந்த ஊழியராக தெரிவுசெய்யப்பட்டார். இவருக்கு தங்க நாணயம், AMA பதக்கம் மற்றும் சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டன.
The Employee of the Year (2023) வெற்றியாளர் எம்.பீ. மொஹமட்  அர்ஷாட்  டுபாயில் வசித்து வருவதல், அவர் சார்பில் தங்க நாணயம், AMA பதக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை அவருடைய தாயார் பெற்றுக்கொண்டார்.
இதேபோல்  கடந்த 3 ஆண்டுகளா OOSAI வானொலி மற்றும் யூடியூப் ஆகியவற்றுக்காக அதிகமான நிகழ்ச்சிகளை வழங்கியதுடன், நடுவர்களால் சிறந்த குரலுக்கான Best Voice of the Year (2023) விருதை  எம்.ஏ. பாத்திமா ரிகாசா பெற்றுகொண்டார்.
மேலும், ஓசை வானொலி மற்றும் சமூகவலைத்தளங்களுக்காக நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பணப்பரிசு, பண வவுச்சர், விருது மற்றும் சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டன.
இதற்கமைய ஓசை வானொலி மற்றும் சமூகவலைத்தளங்களுக்காக நடத்தப்பட்ட போட்டிகளில் 1 ஆம் இடத்தை வவுனியாவை சேர்ந்த எஸ். தமிழ்ச்செல்வன் பெற்றுக்கொண்டார். அவருக்கு 25,000 ரூபா பணப்பரிசு, விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஓசை வானொலி மற்றும் சமூகவலைத்தளங்களுக்காக நடத்தப்பட்ட போட்டிகளில் 2 ஆம் இடத்தை கிளிநொச்சியை சேர்ந்த கந்தசாமி கனிமகள் பெற்றுக்கொண்டார். அவருக்கு 12,500 ரூபா பணப்பரிசு, விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
நடத்தப்பட்ட போட்டிகளில் 3 ஆம் இடத்தை கிருஸ்ணவேனி பாலகுரு பெற்றுக்கொண்டார். அவருக்கு 7,500 ரூபா பணப்பரிசு, விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
நடத்தப்பட்ட போட்டிகளில் 4 ஆம் இடத்தை ஏ. அப்துல்லா பெற்றுக்கொண்டார். அவருக்கு 5,000 ரூபா பணப்பரிசு, விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
நடத்தப்பட்ட போட்டிகளில் 5 ஆம் இடத்தை ஆர்.யூ.கே.எம். ஷெரீனா பெற்றுக்கொண்டார். அவருக்கு 2,500 ரூபா பணப்பரிசு, விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதேவேளை, 5 ஆம் பிரிவில் கல்வி கற்ற மாணவர்களுக்கான கல்விச்சான்றிதழும், நடத்தப்பட்ட போட்டிகளில் 6 ஆம் இடம் முதல் 10 ஆம் இடம் பிடித்தவர்களுக்கான பண வவுச்சர்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வின் நிறைவான கிருஸ்ணவேனி பாலகுருவின் ‘கவிதை கேளுங்கள்’ நிகழ்வும், பாத்திமா ரிகாசாவினால் நன்றி உரையும் நிகழ்த்த்பட்டது.
இந்நிலையில் AMA மற்றும் OOSAI வானொலியுடன் கைகோர்க்க விரும்பும் புதிய நல்உள்ளங்கள் இந்த லிங்கை க்ளிக் செய்து உங்கள் தகவல்களை எமக்கு அனுப்பி வைக்கலாம். – https://rb.gy/w3reg
உங்கள் அனைவருக்கும் நற்பவி!

Leave a comment