சிங்கப்பூா் ஜனாதிபதியாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள தா்மன் சண்முகரத்னம் நாளை (வியாழக்கிழமை) பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் யாழ்ப்பாணத்தை பூா்விகமாக கொண்ட தா்மன் சண்முகரத்னம் 24.8 இலட்சம் வாக்குகளில் 17.46 இலட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்று சின்ஙப்பூர் ஜனாதிபதியாக அந்நாட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை தா்மன் சண்முகரத்னம் சிங்கப்பூரின் 9-ஆவது ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார்.
யாழ்ப்பாணம் ஊரெழுப் பகுதியை பூர்வீகமாகக் கொண்ட தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூர் நாட்டின் நிதி அமைச்சராகவும் துணை பாதுகாப்பு அமைச்சராகவும், துணை பிரதமராகவும் தர்மன் சண்முகரத்தினம் பதவி வகித்து வந்தார்.
அதேவேளை சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த தமிழரான தர்மன் சண்முகரத்னம், சீன வம்சாவளியை சேர்ந்தவரும் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவருமான காச்சோங், டான்தின் லியான் ஆகியோர் போட்டியிட்ட நிலையில் தர்மன் சண்முகரத்தினம் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.