Post

Share this post

வடக்கில் இதற்கு தடை விதிக்க தீர்மானம்!

வடமாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் ஸ்மாட் போன் பாவனைக்கு தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.
இதன்படி, முதற்கட்டமாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் ஸ்மாட் போண் பாவனைக்கான தடை நடைமுறைக்கு வந்துள்ளது.
யாழப்பாண போதனா வைத்தியசாலையில் கடமை நேரத்தில் தாதியர்கள், சுகாதார உதவியாளர்கள், பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் நோயாளர்கள், நோயாளர் பராமரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் ஸ்மாட் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்மாட் போன் பயன்படுத்தி புகைப்படம் எடுப்பது, கானொளி பதிவு செய்வது மற்றும் சமுக வலைத்தளங்களை பயன்படுத்துவது ஆகியனவே தடை செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, சமீபத்தில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 08 வயது சிறுமிக்கு தவறான முறையில் “கானுலா” பொறுத்தப்பட்டமையால், சிறுமியின் இடது கை மாணிக்கட்டுடன் அகற்றப்பட்டுள்ளது.
அது தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தாதியர்கள் கவன குறைவினாலையே சிறுமியின் கை அகற்றப்பட்டது என பல தரப்பினராலும், குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் ஸ்மார்ட் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a comment