Post

Share this post

பெண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பெருந்தொகை ஆணுறைகள்!

கனடாவில் பெண் ஒருவரின் வீட்டுக்கு பெருந்தொகையான ஆணுறைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் ஒன்றாரியோவின் சாப்லியூ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ஒவ்வொரு பெட்டியிலும் தலா 34 ஆணுறைகளைக் கொண்ட 30 பெட்டிகள் குறித்த பெண்ணின் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஜோலி ஏங்கில்ஹார்ட் என்ற பெண்ணின் வீட்டுக்கே இவ்வாறு பெருந்தொகை ஆணுறைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அமேசன் நிறுவனத்தினால் குறித்த பெண்ணின் கணவருக்கு மின்னஞ்சல் மூலம் ஆணுறைகள் அனுப்பி வைப்பது குறித்து அறிவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கின்றார்.
எனினும், இந்த மின்னஞ்சல் போர் போலியானதாக இருக்கும் என கவனத்திற்கொள்ளவில்லை என தெரிவிக்கின்றார்.
ஆணுறைகளைக் கொண்ட பொதி கிடைக்கும் போது குறித்த பெண்ணின் கணவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வளவு பாரியளவிலான ஆணுறைகள் எதனால் அனுப்பி வைக்கப்பட்டது என்பது தமக்கு தெரியவில்லை என அந்தப் பெண் தெரிவிக்கின்றார்.
இந்த ஆணுறைகளுக்காக 670 டொலர்கள் பணம் கடனட்டையில் அறவீடு செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், ஆணுறைகள் எதனையும் ஆர்டர் செய்யவில்லை என அந்தப் பெண் தெரிவிக்கின்றார்.
எவ்வாறெனினும் சம்பவம் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டதனை தொடர்ந்து பணத்தை மீள வழங்குவதாக அமேசன் நிறுவனம் உறுதியளித்துள்ளதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

Leave a comment