ஆசியக் கிண்ண தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்றையப் போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. மழையினால் 42 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்தப் போட்டியில் நாணய சுழற்சியை வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 252 ஓட்டங்கள்கள் குவித்தது.
253 ஓட்டங்கள் இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி அதிரடியாக தொடங்கியது. 3.2 ஒவரில் ஷதாப் கானின் அற்புதமான ஃபீல்டிங்லின் மூலம் குசல் பெராரே 17 ஓட்டங்களுடன் ரன் அவுட் ஆனார்.
இந்நிலையில் கடைசி ஓவரில் 9 ஓட்டங்கள் தேவையான போது அசலங்க இறுதிப் பந்தில் வெற்றிக்கான 2 ஓட்டங்களை எடுத்து அசத்தினார். அசலங்க இறுதிவரை ஆட்டமிழக்காமல் 49* ஓட்டங்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார்.
எளிமையாக வெற்றியடைய வேண்டிய இலங்கை தட்டு தடுமாறி வெற்றி பெற்றது. பாகிஸ்தான் கடைசிவரை போராடி தோற்றது. இஃப்திகார் அஹமது 3 விக்கெட்டுகளும் அப்ரிடி 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
இலங்கை அணி 12 வது முறையாக ஆசிய கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாதனைப் படைத்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (17) நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் இலங்கை அணி மோதவுள்ளது. கடைசியாக நடந்த ஆசிய கிண்ணத்தை இலங்கை அணி வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.