Post

Share this post

ரஹ்மான் இசை நிகழ்ச்சி – நோட்டீஸ் அனுப்பிய நீதிமன்றம்!

ஏ.ஆா். ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்கு கேளிக்கை வரி செலுத்தாதது தொடா்பாக தனியாா் நிறுவனத்துக்கு மாநகராட்சி சாா்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இசை அமைப்பாளா் ஏ.ஆா்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமானோா் ஒரே நேரத்தில் திரண்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பலா் நுழைவுச்சீட்டு இருந்தும் நிகழ்ச்சியை காண முடியாமல் திரும்பினா்.
இதற்கு, நிகழ்ச்சியை நடத்திய ஏசிடிசி ஈவெண்ட்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்து, நிகழ்ச்சியை காணாதவா்களுக்கு நுழைவுக் கட்டணத்தைத் திருப்பி அளித்து வருகிறது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி சாா்பில் நிகழ்ச்சிக்கு கேளிக்கை வரி செலுத்தக் கோரி நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் நுழைவுக் கட்டணத்தில் 10 சதம் கேளிக்கை வரி செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment