Post

Share this post

என்னால் முடியவில்லை – சீமான் வழக்கு வாபஸ் – நடிகை பேட்டி!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி போலீசிடம் தொடர்ந்து புகார் அளித்து வருகிறார்.
சீமான் மீது குற்றச்சாட்டுகளையும் தனது ஆதங்கத்தையும் சமூக வலைதளங்கள் மூலம் வெளிப்படுத்தி வருகிறார் இந்நிலையில், வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு வந்த விஜயலட்சுமி, தனது புகார் மனுவை வாபஸ் பெற்றார்.
இதுதொடர்பாக விஜலட்சுமி கூறியதாவது: சீமானை யாரும் எதுவும் செய்ய முடியாது, சக்திவாய்ந்தவராக இருக்கிறார். காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. தனி ஒருவராக போராட முடியவி்ல்லை. சீமானை எதிர்கொள்ள எனக்கு போதிய ஆதரவு யாரிடமும் இருந்து கிடைக்கவில்லை.
புகார் மீதான நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை. தொய்வு இருந்தது. வழக்கை வாபஸ் பெற யாரும் என்னை கட்டாயப்படுத்தவில்லை. தோல்வியை ஒப்புக்கொண்டு புகாரை வாபஸ் பெறுவதாகவும்,மீண்டும் பெங்களூருவுக்கே புறப்படுகிறேன என தெரிவித்துள்ளார்.

Leave a comment