Post

Share this post

அந்த சமயத்தில் 15 புருஷன் இருப்பதாக நினைத்து கொண்டேன்!  

நடிகை அமலா பால், ஆடை படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது பேசியது, நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும், அனைவர் மத்தியிலும் கவனிக்கப்பட்டு வருகிறது.
இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில், நடிகை அமலா பால் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஆடை’. இந்த படத்தை எஸ்கே ஸ்டுடியோஸ் தயாரித்திருந்தது. திரில்லர் பாணியில் எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தில், அமலா பால் மிகவும் போல்டான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
குறிப்பாக ஆடை இல்லாமல் இவர் நடித்திருந்தது திரையுலகில் அப்போது மிகப் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. இப்படி தைரியமான ரோலில் இவர் நடித்திருந்தாலும், இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. ஆனால் விமர்சனம் ரீதியாக அமலா பாலுக்கு பாராட்டுக்கள் குவிந்தது.
மேலும் அமலா பால் நிர்வாணமாக நடித்த காட்சி படமாக்கப்பட்ட போது, இந்த காட்சி எந்த வகையிலும் வெளியே சென்று விட கூடாது என்பதில் படக்குழு மிகவும் கவனமாக இருந்ததாகவும், அந்த பில்டிங் உள்ளே 15 ஆண்கள் மட்டுமே இருந்ததாகவும், ஒரு பெண் கூட கிடையாது என அமலாபால் ‘ஆடை’ படத்தின் ஆடியோ லான்ச்சின் போது தெரிவித்திருந்தார்.
மேலும் அந்த நிர்வாண காட்சியில் நடிக்கும் போது, மிகவும் தயக்கமாக இருந்ததாகவும். இத்தனை பேர் முன்பு ஆடையின்றி எப்படி நடிப்பது என்கிற ஒரு மோசமான மனநிலையில் தான் நான் இருந்தேன் என அமலா பால் கூறினார்.
பின்னர் தன்முன்பு உள்ள அந்த 15 பேரும், தன்னுடைய 15 கணவர்கள் என மனதில் நினைத்துக் கொண்டு அதன் பிறகு அந்த காட்சியில் நடிக்க ஆரம்பித்தேன் என மிகவும் போல்ட்டாக பேசி இருந்தார். அமலாபாலின் இந்த பழைய பேச்சு, மீண்டும் சமூக வலைதளத்தில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

Leave a comment