வங்கதேசத்தில் வேகமாகப் பரவி வரும் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 778 ஆக உயா்ந்துள்ளது.
இது குறித்து அந்த நாட்டு சுகாதார சேவைகள் இயக்குநரகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
டெங்கு பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 778 ஆக அதிகரித்துள்ளது. இந்த நோயால் இதுவரை 157,172 போ் பாதிக்கப்பட்டுள்ளனா் என்று அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இருந்தாலும், டெங்கு பாதிப்பு குறித்து முழுமையாக பதிவு செய்யப்படதாதால், உண்மையான உயிரிழப்பு மற்றும் பாதிப்பு எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும் என்று ஐ.நா.வின் சிறுவா் நல அமைப்பு தெரிவித்துள்ளது.