Post

Share this post

4 கதாநாயகர்கள் இணையும் புதிய திரைப்படம்!

அஜய் தேவ்கன் நடிப்பில் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் வெளியான சிங்கம் ரிட்டர்ன் வெளியாகி 9 வருடங்கள் ஆகின்றன. தற்போது இந்த காவலர்கள் யுனிவர்ஸில் ரன்வீர் சிங் இணைந்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
அஜய் தேவ்கன் நடிப்பில் இயக்குநர் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் 2011இல் சிங்கம் படம் வெளியானது. இது தமிழில் ஹரி இயக்கிய சிங்கம் படத்தின் ரீமெக். மீண்டும் 2014இல் அஜய் தேவ்கனுடன் ரோஹித் ஷெட்டி இயக்கிய படம்தான் சிங்கம் ரிட்டர்ன்ஸ்.
2018இல் ரன் வீர் சிங்குடன் ரோஹித் ஷெட்டி மீண்டும் காவல்துறை அதிகாரியாக சிம்ஹா எனும் பெயரில் எடுத்தார். இந்தப்படம் டெம்பர் என்னும் 2005இல் வெளியான் தெலுங்கு படத்தின் ரீமெக் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சிங்கம் யுனிவர்ஸில் 4 கதாநாயகர்கள் இணைந்துள்ளார்கள். அஜய் தேவ்கனுடன் அக்‌ஷய் குமார், ரன்வீர் சிங் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரரும் நடிகருமான ஸ்ரீசாந்த் ஆகியோர்கள் இணைந்துள்ளார்கள்.

‘சிங்கம் அகெய்ன்’ எனப் பெயரிடப்பட்ட இந்தப் படத்தின் பூஜை நேற்று நடந்தது. இதில் அஷய் குமார் பங்கேற்கவில்லை. வெளிநாட்டில் இருப்பதால் பங்கேற்ற முடியவில்லை எனக் கூறியிருந்தார். தனது சிங்கம் யுனிவர்ஸை மையப்படுத்தி ரோஹித் ஷெட்டி கதை அமைத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜய் தேவ்கன் தனது ட்விட்டர் பக்கத்தில் (எக்ஸ்), “12 வருடங்களுக்கு முன்பு மிகப்பெரிய காவலர்களின் யுனிவர்ஸினை இந்திய சினிமாவிற்கு அளித்தோம். ரசிகர்கள் அளித்த அன்பினால் சிங்கம் குடும்பம் பெரிதாகியுள்ளது. சிங்கம் குடும்பத்தினை முன்னேற்ற நாங்கள் இன்று சிங்கம் அகெய்ன் எனும் படத்தின் மூலமாக இணைந்து வந்துள்ளோம்” எனப் பதிவிட்டுள்ளார்.

Leave a comment