Post

Share this post

கோவையில் ரஜினிகாந்த் – நடந்தது என்ன?

கோவை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சூலூரில் நடைபெறும் குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்க கோவை வந்தாக செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
நடிகர் ரஜினி காந்த் சூலூரில் நடைபெற உள்ள தனது குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மனைவி லதாவுடன் கோவை வந்தடைந்தார். நடிகர் ரஜினிகாந்த் வருவதை அறிந்த அவரது ரசிகர்கள் விமான நிலையம் முன்பாக கூடியிருந்தனர்.
சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு சரியாக 11.30 மணிக்கு வெளியே வந்த அவரை, ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு நடிகர் ரஜினி காந்த் பதிலளிக்க தயாரான நிலையில், கூட்ட நெரிசலால் அவரால் சரிவர பதிலளிக்க முடியவில்லை. ஓரிரு வார்த்தைகளாக தனது குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கோவை வந்துள்ளதாக செய்தியாளர்களிடம் கூறினார்.
இதனையடுத்து காரின் மேல் நின்றவாறு ரசிகர்களுக்கு கையசைத்து அங்கிருந்து விடை பெற்றார்.

Leave a comment