6 மாதமாக சிகிச்சையில் இருந்த விஜய் ஆண்டனி மகள்! வௌியான அதிர்ச்சித் தகவல்!

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மகள் தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் இது குறித்து தேனாம்பேட்டை பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் தற்கொலை செய்து கொண்ட அறையில் தற்போது தடயவியல் நிபுணர்கள் சோதனை செய்து வருவதாகவும் அவரது கைப்பேசியும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தற்கொலைக்கு முன் அவர் கடிதம் ஏதும் எழுதி உள்ளாரா என்பது குறித்து தேடுதல் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் விஜய் ஆண்டனியின் மகள் மீரா கடந்த ஆறு மாதங்களாக மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.