Post

Share this post

திரையுலகில் மற்றுமொரு பிரிவு!

பாரதிராஜா இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் என் உயிர் தோழன். இப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் நடிகர் பாபு. அப்படத்தில் அவரின் நடிப்பு கவனிக்கப்பட்டது.
அதன்பின், ‘பெரும்புள்ளி’ , ‘தாயம்மா’ ஆகிய படங்களிலும் நாயகனாக நடித்தார்.
தொடர்ந்து, ‘மனசார வாழ்த்துங்களேன்’ படத்திற்காக ஒரு காட்சியில் டூப் போடாமல் ஆர்வத்தில் மேலே இருந்து கீழே குதித்தபோது முதுகெலும்பு உடைந்து படுகாயம் அடைந்தார்.
அன்றிலிருந்து கடந்த 30 ஆண்டுகளாக படுத்த படுக்கையாகவே இருந்தவர் நேற்றிரவு உடல்நலக்குறைவால் காலமானார். நடிகர் பாபு, முன்னாள் அதிமுக அமைச்சர் க.இராஜாராமின் சகோதரி மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment