Post

Share this post

ஆஸ்கருக்கு செல்லும் ஜவான்?

இயக்குநர் அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். அனிருத் இசையமைத்த இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படம் செப்.7ஆம் தேதி உலகம் முழுவதும் 4,500 திரைகளில் வெளியானது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரான இதன் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. கலவையான விமர்சனங்கள் வந்தாலுமே படத்தின் வசூலுக்கு பாதிப்பில்லை. ஜெட் வேகத்தில் வசூலித்து வருகிறது ஜவான். 12வது நாளில் ரூ.883.68 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
நேர்காணல் ஒன்றில் அட்லியிடம் ஜவான் படத்தினை ஆஸ்கருக்கு அனுப்புவீர்களா? எனக் கேள்விக் கேட்டதற்கு, “கண்டிப்பாக ஜவானும் செல்ல வேண்டும். சினிமாவில் வேலை பார்க்கும் அனைத்து இயக்குநர்களும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் தங்களது முயற்சிக்கு கோல்டன் குளோப்ஸ், ஆஸ்கர் விருது, தேசிய விருதுகள் மீது ஆசை இருக்கும். அதனால், ஜவானை ஆஸ்கருக்கு எடுத்து செல்லும் விருப்பம் இருக்கிறது. பார்ப்போம். இந்த நேர்காணலை ஷாருக்கான் சார் பார்த்துவிட்டு அவர் கூறினால் கொண்டு செல்லலாம்.
ஷாருக்கான் அடிப்படை மனிதனுக்கு உண்டான அன்பான இதயத்தை கொண்டவர். நாம்தான் அவரிடம் அடிக்கடி நீங்கள் ஷாருக்கான் என கூற வேண்டியுள்ளது. எபோதுமே அப்படித்தான் இருக்கிறார். எப்போதும் மாறுவதில்லை”எனக் கூறியுள்ளார்.
இந்தாண்டு ஆஸ்கருக்கான சிறந்த பாடல் விருதினை ஆர்ஆர்ஆர் திரைப்படமும் தி எலிபெண்ட் விஸ்பர்ஸ் எனும் தமிழ்ப்படம் சிறந்த ஆவண குறும்படம் விருதினையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Leave a comment