நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 படத்தின் ரௌடி பேபி பாடல் யூடியூப்பில் 150 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
தனுஷ் – பாலாஜி மோகன் கூட்டணியில் உருவான படம் – மாரி 2. இதில் சாய் பல்லவி, வரலட்சுமி போன்றோர் நடித்தார்கள். இசை – யுவன் சங்கர் ராஜா.
நடிகர் தனுஷ் எழுதிய இந்தப் பாடல் வெளியானபோதே மிகவும் புகழ்பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் இடம்பெற்ற ரெளடி பேபி பாடலின் விடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிக வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, நடன இயக்குநர் பிரபுதேவாவுக்கும் நடிகை சாய் பல்லவிக்கும் அதிகப் பாராட்டுகள் கிடைத்தன.
படக்குழு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 150 கோடி பார்வைகளை தொட்ட முதல் தென்னிந்திய பாடல் என குறிப்பிட்டுள்ளது.