சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த காடையாம்பட்டி அருகே உள்ள ஜோடுகுளி பகுதியை சேர்ந்த சிலர் ஆடு மேய்ப்பதற்காக வனப்பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு எரிந்த நிலையில் இளம் பெண்ணின் சடலம் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தின் அருகே கிடந்த உடைகள், செருப்பு, தாலிக்கொடி ஆகியவற்றை வைத்து விசாரணையை தொடங்கினர்.
விசாரணையில் கொலை செய்யப்பட்ட இளம் பெண் ஜலகண்டாபுரத்தைச் சேர்ந்த கோகிலவாணி (வயது 20) என்பதும் அரியலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் பாராமெடிக்கல் நான்காவது ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூர் எலக்ட்ரானிக்ஸ் சிட்டியை சேர்ந்த பொறியாளர் முரளி கிருஷ்ணா (வயது 24) என்பவர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் முரளி கிருஷ்ணாவின் தாயும் கோகிலவாணியின் சித்தியும் பெங்களூருவில் ஒரே இடத்தில் வேலை செய்து வந்துள்ளனர். அப்போது கோகிலவனிக்கும் முரளி கிருஷ்ணாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. பின்னர் இருவரும் வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்துக்கொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் அவ்வப்போது முரளி கிருஷ்ணா பெங்களூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் சேலத்துக்கு வந்து கோகிலவாணியை பார்த்துச் சென்றுள்ளார்.