Post

Share this post

அக்டோபர் முதல் இலங்கையில் அமுலுக்கு வரும் திட்டம்!

இலங்கையில் பல பகுதிகளுக்கு குறுஞ்செய்தி மூலம் மாதாந்த கட்டணங்கள் வழங்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இந்த குறுஞ்செய்தி சேவை கொழும்பு – தெற்கு, கண்டி, பொலன்னறுவை மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளில் செயற்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இது எதிர்வரும் அக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும். இந்த முறை 2024 ஜனவரி 01 முதல் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

Leave a comment