என்னவளே படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார் சினேகா. முதல் படத்திலேயே மாதவனுக்கு ஜோடியாக நடித்த சினேகா, அடுத்ததாக லிங்குசாமி இயக்கிய ஆனந்தம் படத்தின் மூலம் பிரபலம் ஆனார். இதையடுத்து 10 ஆண்டுகள் தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோயினாக கொடிகட்டி பறந்த சினேகாவிற்கு கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் ஆனது. இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
நடிகை சினேகா, பிரசன்னாவை திருமணம் செய்துகொள்ளும் முன்னரே, அவரது முதல் காதல் தோல்வியில் முடிந்துள்ளது. திருமணம் வரை சென்று நின்றுபோன சினேகாவின் முதல் காதல் பற்றி சர்ச்சைக்குரிய சினிமா பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் பேசி இருக்கிறார். பிரசன்னாவை காதலிக்கும் முன்பே சினிமா தயாரிப்பாளர் ஒருவருடன் சினேகாவுக்கு காதல் ஏற்பட்டதாகவும் அது தோல்வியில் முடிந்ததாகவும் பயில்வான் கூறி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பிரசன்னாவை காதலிக்கு முன்னரே நடிகை சினேகா நாக் ரவி என்கிற தயாரிப்பாளரை உருகி உருகி காதலித்தார். ஒரு கட்டத்திற்கு பின்னர் இவர்களது காதல் திருமணம் நோக்கி நகர்ந்தது. இருவரும் வைர மோதிரமெல்லாம் மாற்றி நிச்சயம் செய்துகொண்டார்கள். நிச்சயத்திற்கு பின்னர் காதலரின் மீது சந்தேகப்பட்ட சினேகா, அவர் தனக்கு உண்மையாக இல்லை என்பதை தெரிந்துகொண்டார்.
அதனால் அந்த தயாரிப்பாளருடனான காதலை முறித்துக்கொண்டார் சினேகா. இதனால் இவர்களது திருமணமும் நிச்சயத்தோடு நின்றுபோனது. இதன்பின்னர் திருமணமே வேண்டாம் என இருந்த நடிகை சினேகாவிற்கு ஒரு கட்டத்தில் பிரசன்னா மீது காதல் ஏற்பட்டது. அதன்பின்னர் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகளும் உள்ளன” என பயில்வான் ரங்கநாதன் கூறி இருக்கிறார்.