Post

Share this post

iPhone தொழிற்சாலையில் தீ!

இந்தியாவின் சென்னை நகருக்கு அருகே இருக்கும் செங்கல்பட்டு பகுதியில் உள்ள Pegatron iPhone தொழிற்சாலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
சென்ற ஞாயிற்றுக்கிழமை (24 செப்டம்பர்) அங்கு மூண்ட தீ அதற்குக் காரணம்.
அது இன்று (27 செப்டம்பர்) வரை நீடிக்கலாம் அல்லது இன்னும் சில நாள்களுக்குத் தொடரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தீச்சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரிக்கின்றனர். Pegatron, Apple நிறுவனத்துக்கு iPhone பகுதிகளை வழங்குகிறது.
இந்தியாவில் அந்த உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஒரே தொழிற்சாலை அது.
தீச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், அதனால் Pegatron நிறுவனத்துக்கு நிதி, செயல்பாட்டு பாதிப்பு ஏற்படவில்லை என்றும் REUTERS முன்னதாகத் தெரிவித்தது.
ஆயினும் கடந்த இரு நாள்களாகத் தொழிற்சாலையில் பணிகள் நிறுத்தப்பட்டன.
தொழிற்சாலையில் ஏற்பட்ட சேதம் சரிசெய்யப்படுவதாகவும், இவ்வாரம் முழுவதும் அது மூடப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Leave a comment