பாலின அடிப்படையிலான வன்முறைகளில் 60 வீதமானவை ஃபேஸ்புக் மூலமாக இடம்பெறுவதாக Hashtag மற்றும் Nathin Delete அமைப்புகள் இணைந்து நடத்திய சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு மக்களை துஷ்பிரயோகம் செய்யும் குற்றவாளிகளுள் கணவர், முன்னாள் துணை அல்லது முன்னாள் கணவர், குடும்ப உறுப்பினர்கள் அல்லது அறிமுகமானவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் உள்ளடங்குவதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு முதல் தகவல் தொடர்பு சேவையைப் பயன்படுத்தும் போது ஏற்பட்ட வன்முறைகள் பற்றிய தகவல்களைச் சேகரித்து குறித்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.
பேச்சு பாகுபாடு, துன்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தல்கள், தனிப்பட்ட தகவல்களை அங்கீகரிக்காமல் பகிர்தல், அடையாள திருட்டு, நுட்பமான கண்காணிப்பு, பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பண சுரண்டல் ஆகியவை இந்த கணக்கெடுப்பில் அடையாளம் காணப்பட்ட பாலின அடிப்படையிலான வன்முறைகளில் அடங்குகின்றன.
இந்த குற்றங்களில் பெரும்பாலானவை ஆண்கள் மற்றும் சிறுவர்களால் செய்யப்படுகின்றன என்பது கணக்கெடுப்பு குழுவால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவர்களால் பெண்கள், சிறுமிகள் இணையத்தால் அவதிப்படுவதைச் சுட்டிக்காட்டிய கணக்கெடுப்பாளர்கள், ஒருவருக்கு நேர்ந்த வன்முறையை குடும்பத்தினரிடம் சொல்லத் தயக்கம் அதிகமாக இருப்பதாகவும், இதன் காரணமாக சட்ட நடவடிக்கை எடுக்க தவறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான செயல்பாடுகளால் பாதிக்கப்பட்டு பொலிஸாரிடம் உதவி கேட்பவர்கள் மீண்டும் பொலிஸ் நிலையத்தில் அடக்குமுறைக்கு உள்ளாவதாகவும், குடும்பப் பொறுப்பு மற்றும் கடமைகள் காரணமாக அடிக்கடி பாதிக்கப்பட்ட பெண்கள் சட்டத்தின் முன் வருவதைத் தவிர்ப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தொழில்நுட்ப விடயங்களை அறியாமையால் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுவது வழமை என கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.