குடும்பத்துடன் மகன்களின் பிறந்த நாளை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா கொண்டாடி உள்ளனர்.
தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் படங்களில் மும்முரமாக நடித்து வந்த நயன்தாரா, முதல்முறையாக பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ள இறைவன் திரைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. தொடர்ந்து, மண்ணாங்கட்டி படத்தில் முதன்மையான கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார்.
இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் திகதி திருமணம் செய்துகொண்டனர். இத்தம்பதியினர், வாடகைத்தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்று பெற்றோர்களாகவும் இருக்கின்றனர்.
குழந்தைகளின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று விக்னேஷ் சிவன் தன் மகன்களின் முகங்களை முதல்முறையாக அறிமுகப்படுத்தினார்.