Post

Share this post

பொற்கோயிலில் நடிகை – வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகை ரம்யா பாண்டியன் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலுக்கு சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.
மொட்டை மாடியில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு, ஒரே இரவில் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் ஜோக்கர் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து சமுத்திரக்கனிக்கு ஜோடியாக ஆண் தேவதை படத்தில் நடித்தார். மலையாள நடிகர் மம்மூட்டி நடிப்பில் வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் படத்திலும் இவர் நடித்திருந்தார்.
கும் வித் கோமாளி மற்றும் பிக்பாஸ் 4வது சீசனில் கலந்துகொண்டு ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.
இந்த நிலையில், ரம்யா பாண்டியன் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலுக்கு சென்று சில விடியோ மற்றும் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Leave a comment