சீனாவின் சினோபெக் நிறுவனத்துக்கு நாட்டிலுள்ள மேலும் 50 எரிபொருள் நிலையங்களை அமைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (28) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சினோபெக் நிறுவனத்திற்கு 150 எரிபொருள் நிலையங்களை வழங்கியுள்ளது. அவற்றில் 145 எரிபொருள் நிலையங்களை பொறுப்பேற்பதற்கு அந்த நிறுவனம் உடன்படிக்கை கைச்சாத்திட்டுள்ளது.