இந்தோனேசியாவில் உள்ள புரோமோ மலையில் 700 ஆண்டுகள் பழமையான விநாயகர் சிலை ஒன்று உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிடப்பட்டுள்ளன.
குறித்த அந்த விநாயகர் சிலையானது ”Bromo Tengger Semeru” தேசிய பூங்கா அமைந்துள்ள மவுண்ட் புரோமோ மலையின் விளிம்பில் அமைந்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரித்துள்ளன.
இதன் போது முன்னர் அந்த மலையை சுற்றி வசித்து வந்த டெங்கர் மாசிஃப் பழங்குடியினர் எரிமலைவெடிப்பினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த பாதிப்பிலிருந்து தங்களை பாதுகாப்பதற்காக மூதாதையர்கள் அங்கு ஒரு விநாயகர் சிலையை அமைத்தாகவும் கூறப்படுகின்றது.
அத்துடன் விநாயகர் சிலையை அமைத்ததில் இருந்து இது வரை எந்த ஒரு எரிமலை சீற்றமும் இடம் பெறவில்லை என்பதால் மக்களிடத்தில் இன்று வரை விநாயகரை வழிபடும் பாரம்பரியம் கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.
மேலும் இந்தோனேசியா செல்லும் சாகச விரும்பிகள் இந்த இடத்திற்கு அதிகம் உள்வாங்கப்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கி்ன்றன.