அவுஸ்திரேலியாவில் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பளித்து இன்றைய தினம் விடுதலை செய்துள்ளது.
இந்நிலையில் தனுஷ்க குணதிலக்க எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி இலங்கை திரும்பவுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டதன் காரணமாக, தனுஷ்க குணதிலக்க இலங்கை திரும்புவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
குறித்த தீர்ப்பினால் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் சங்கம் விதித்திருந்த தடையும் நீக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
மேலும், தனுஷ்க குணதிலக்கவின் வழக்குக்காக செலவிடப்பட்ட பணம் அனைத்தும் அவரிடமிருந்து தற்போது வசூலிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
வழக்கின் தீர்ப்பை அறிவித்த நியூ சவுத் வேல்ஸ் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சாரா ஹகெட், கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவை அவதூறு செய்யும் வகையில் மனுதாரருக்கு ஏதோ ஒரு உள்நோக்கம் இருந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.