தமிழ் சினிமாவில் தனுஷின் 3, கௌதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை படங்களுக்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினி இயக்கியுள்ள படம் தான் லால் சலாம்.
இந்தப் படத்தில் ரஜினி அவர்கள் கௌரவ வேடத்தில் நடிக்க, விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படத்தில் மொய்தீன் பாய் என்ற பெயரில் ரஜினி நடித்துள்ளார், மும்பை, சென்னை, புதுச்சேரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வந்தது.
படம் வரும் ஜனவரி 2024 ம் ஆண்டு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளார்கள், அதற்கான வேலைகளிலும் மும்முரமாக உள்ளனர். இந்த நிலையில் படம் குறித்து ஒரு ஷாக்கிங் தகவல் வந்துள்ளது.
அது என்னவென்றால் 20 நிமிடம் வரப்போகும் நடிகர் ரஜினி நடித்த காட்சிகள் டெலிட் ஆகியுள்ளதாம். இதுகுறித்த தகவல் சமூக வலைதளங்களில் வலம் வர ரசிகர்கள் கடும் ஷாக்கில் உள்ளனர்.