Post

Share this post

ஷகீப் அல் ஹசன் விலகல்!

உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் அணித்தலைவர் ஷகீப் அல் ஹசன் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.
டெல்லியில் நேற்றைய தினம் (06) இடம்பெற்ற இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இடது கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் அடுத்த போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என வெளிநாட்டு விளையாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
டெல்லியில் அவரது இடது கை எக்ஸ்ரே பரிசோதனையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இறுதிப் போட்டி
இப்போட்டியில் துடுப்பாட்டம் செய்தபோது பந்து கையில் பட்டதால் காயம் அடைந்த அவர், தற்காலிக சிகிச்சைக்குப் பிறகு தொடர்ந்து துடுப்பாட்டம் செய்தார்.
அதன்படி, புனேவில் வரும் 11 ஆம் திகதி நடைபெறும் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக பங்களாதேஷ் அணி விளையாடும் போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment