பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் போட்டியாளராக இருக்கும் மாயா கிருஷ்ணன், ஒரு லெஸ்பியன் என பிரபல பின்னணி பாடகி சுசித்ரா கூறி இருக்கிறார்.
பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக இருக்கும் மாயா, இந்த வாரம் சர்வாதிகார கேப்டனாகவும் இருந்து வருவதால் அவர் மீதுள்ள கோபத்தை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கொட்டித்தீர்த்து வருகின்றனர். அதுமட்டுமின்றி ரியல் லைஃபில் மாயா எப்படிப்பட்டவர் என்கிற தகவல்களும் ஒவ்வொன்றாக வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் பிரபல பின்னணி பாடகியும், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான சுசித்ரா, மாயாவின் மறுபக்கத்தை கூறி பகீர் கிளப்பி இருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியதாவது : “பிக்பாஸ் வீட்ல இருக்குற எல்லாருமே சினிமா இண்டஸ்ட்ரிய சேர்ந்தவங்க. அதுவும் மாயா ஒரு லெஸ்பியன் என எல்லாருக்குமே தெரியும். அவர் கவுதம் மேனனி அசிஸ்டண்ட் ஒருவருடன் வாழ்ந்து வந்தார். அந்த பெண்ணும் ஒரு லெஸ்பியன் தான். என்னுடைய முன்னாள் கணவர் கார்த்திக் கூட மாயாவுக்கு உதவி இருக்கிறார். அவர் ஒரு தியேட்டர் ஆர்டிஸ்ட் என்பதால், மாயா அவரிடம் பெண்களுக்காக தனி தியேட்டர் ஆர்டிஸ்ட் குரூப் ஒன்றை உருவாக்க நிதி திரட்ட ஆதரவு கோரினார்.
அதைவைத்தே நிறைய பேர் காசையும் திருடி இருக்கிறார். செளந்தர்யா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோரெல்லாம் அவரின் முன்னெடுப்புக்கு நிதிஉதவி வழங்கியதாக கேள்விப்பட்டேன். மாயா லெஸ்பியனா இருப்பதற்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனா அவங்க லெஸ்பியனாக இல்லாத பூர்ணிமாவை கவர் பண்ண பார்க்கிறார். லெஸ்பியன்கள் தாங்கள் விரும்பும் பெண்கள் வேறொருவருடம் நெருக்கமாக பழகுவதை விரும்பவே மாட்டார்கள்.
இந்த மாதிரி பெண்கள் தான் Lady cardனு பல கார்டு வச்சிக்கிட்டு சுத்துவாங்க. இப்போ இருக்குற போட்டியாளர்களோட பெற்றோரெல்லாம் பயத்துல இருக்காங்க. ஐஷூவின் குடும்பத்தினர் ரொம்ப பாவம். தெருவுல அவங்களால தலை காட்ட முடியாது. 50 ஷேட்ஸ் ஆஃப் கிரேலாம் ஒரு விளையாட்டுனு விளையாடுது அந்த பொண்ணு. ஆரம்பத்துல ஐஷூவ எல்லாருக்குமே பிடித்திருந்தது. ஆனால் இப்போ மாயா கேங்கில் சேர்ந்து விஷமாகிட்டா” என சுசித்ரா பேசி உள்ளார்.