அரச ஊழியர்களுக்கு 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் சம்பள உயர்வு கிடைக்கவில்லை. எனவே அரச ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2024 வரவு செலவு திட்ட உரையின் போது தெரிவித்தார்.
ஜனவரி 2024 முதல் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு 10,000 ரூபாயால் அதிகரிக்கப்படும் எனவும் ஜனாதிபதி யோசனை முன்வைத்துள்ளார்.
எனினும் இந்த கொடுப்பனவு 2024 ஏப்ரல் மாத சம்பளத்துடனேயே வழங்கப்படும். இதற்கமைய அந்த கொடுப்பனவு 17,800 ஆக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.