2025 ஐசிசி செம்பியன்ஸ் கிண்ண போட்டிக்கு இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் தகுதி பெற்றுள்ளன.
உலகக் கிண்ண போட்டிக்கு ஈடாக செம்பியன்ஸ் கிண்ண போட்டி நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டுக்கு பின் இப்போட்டி நடத்தப்படவில்லை. இந்நிலையில் 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் 2025 இல் பாகிஸ்தானில் இப்போட்டிகளை ஐசிசி நடத்த உள்ளது.
இதில் மொத்தம் 8 அணிகள் மோதுகின்றன. உலகக் கிண்ணத்தில் முதல் 7 இடங்களைப் பெறும் அணிகள் நேரடியாக தகுதி பெறும். மேலும் போட்டியை நடத்தும் நாடும் தகுதி பெறும்.
இந்நிலையில் நடப்பு உலகக் கிண்ணத்தில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, பாகிஸ்தான் (போட்டியை நடத்தும் நாடு), பங்களாதேஷ் தகுதி பெற்றன.
புள்ளிகள் பட்டியலில் 7 ஆவது இடத்தில் பாகிஸ்தான் இருந்தது. ஆனால் போட்டியை நடத்தும் நாடு என்ற அந்தஸ்துடன் அந்நாடு தகுதி பெற்றது. இதனால் பங்களாதேஷ் செம்பியன்ஸ் கிண்ணத்துக்கு தகுதி பெற்றது.
ஆனால் பிரதான அணிகளான இலங்கை, மேற்கு இந்திய தீவுகள், சிம்பாப்வே ஆகியவை தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.