Post

Share this post

தீபாவளிக்கு கார் வாங்கிய பிரபல நடிகை!

சின்னத்திரை நாயகி அனுஷா பிரதாப் தீபாவளியையொட்டி புதிய கார் வாங்கியுள்ளார். அதன் புகைப்படங்களைப் பகிர்ந்த அனுஷாவிற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சன் தொலைக்காட்சியில் கடந்த 2022 ஆகஸ்ட் முதல் ஒளிபரப்பாகிவரும் ஆனந்த ராகம் தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடிப்பவர் நடிகை அனுஷா பிரதாப். அவருக்கு ஜோடியாக அழகப்பன் நடிக்கிறார்.
கர்நாடகத்தைச் சேர்ந்த அனுஷா விளம்பர மாடலாக திரைத்துறையில் நுழைந்தார். தெலுங்கு, கன்னட மொழிகளில் பல்வேறு தொடர்களில் நடித்துள்ளார். ஆனந்த ராகம் தொடரின் மூலம் தமிழில் நடித்து வருகிறார். இந்தத் தொடரில் நடிப்பதுடன் அதிரடியான சண்டைக் காட்சிகளிலும் அனுஷா ஈடுபடுகிறார்.
இதனால், ரசிகர்கள் மத்தியில் அனுஷாவுக்கு அதிரடி நாயகி ஈஸ்வரி என்ற பெயரும் உண்டு. ஈஸ்வரி என்பது ஆனந்த ராகம் தொடரில் அனுஷாவின் கதாபாத்திரத்தின் பெயர்.
சமூக வலைதளத்தில் அடிக்கடி புகைப்படங்களைப் பதிவிட்டு ரசிகர்களுடன் உரையாடிவருபவர் அனுஷா. இந்நிலையில், தற்போது தீபாவளிக்கு கார் வாங்கிய விடியோவை பகிர்ந்துள்ளார். அவருக்கு சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
புது காருடன் கோயிலுக்குச் சென்ற விடியோவை வெளியிட்டுள்ள அனுஷா, மாற்றங்களை எதிர்பாருங்கள். வாய்ப்புகளை எடுத்துக்கொள்ளுங்கள். சதுரங்கக் காய்களாக இல்லாமல், சதுரங்க விளையாட்டு வீரராக மாறுங்கள். இது உங்களின் நகர்வாக இருக்க வேண்டும். அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment