Post

Share this post

1,000 ரூபாயால் மாற்றமடைந்த தங்கம்!

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (14) அதிகரித்துள்ளதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி கொழும்பு செட்டியார் தெரு, தங்க கடைகளில் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 160,500 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இதேவேளை, 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 173,500 ரூபாவாகவும் உயர்ந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு, தங்க கடைகளின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று 13 ஆம் திகதி 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 159,500 ரூபாவாகவும், 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 172,500 ரூபாவாகவும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment