Post

Share this post

எச்சரிக்கை – பிரியாணி, ப்ரைட் ரைஸ், இறைச்சி உண்பவரா?

பிரியாணி, ப்ரைட் ரைஸ், இறைச்சி போன்ற உணவுகளுக்கு பல்வேறு நிறமூட்டிகளை கொண்டு பிரகாசமாகவும் கவர்ச்சியாகவும் தயாரிக்கப்படும் உணவுகள் தற்போது மக்களை கவர்கின்றன.
இந்நிலையில் இந்த உணவுகள் உடலுக்கு தீங்கு விளைவிப்பதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த நிறமிகள் சரியான அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளதா அல்லது அதிக அளவு பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய சுகாதார அமைச்சு ஆய்வுக்கூட பரிசோதனை நடத்த வேண்டும் என சங்கத்தின் பொருளாளர் ரோஷன குமார தெரிவித்துள்ளார்.

உணவுச் சட்டம் சந்தையில் பயன்படுத்தப்படும் வண்ணங்களின் அளவைக் கட்டுப்படுத்தும் உட்பிரிவுகளையும் உள்ளடக்கியுள்ளது.

இருப்பினும், ரோஸ்ட் சிக்கன் பிரியாணி மற்றும் ஃபிரைட் ரைஸ் வகைகள் தயாரிப்பதில் இந்த வண்ணங்களைப் பயன்படுத்துவது உணவுக் கடைகளில் காணப்படுகிறதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a comment