Post

Share this post

எச்சரிக்கை – கனடாவுககு போலி விசா!

போலியான கனேடிய விசாவை பயன்படுத்தி சட்டவிரோதமாக நாட்டை விட்டு தப்பிச்செல்ல முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குடிவரவு குடியகல்வு எல்லை பாதுகாப்பு பிரிவினரால் சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பை சேர்ந்த 37 வயதான இரட்டை பிரஜாவுரிமை கொண்ட ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நேற்று காலை 8.15 மணிக்கு துபாய் நோக்கி பயணிக்கவிருந்த எமிரேட்ஸ் விமான சேவையின் ஈ.கே 653 விமானத்தினூடாக கனடா செல்ல முயன்றுள்ளார்.
சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Leave a comment