தம்பதியினர் உணவகத்தில் செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு உணவகம் ஒன்று பகிர்ந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வந்தது. அந்த வீடியோவில் ஒரு தம்பதியினர் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் அவர்கள் தங்களுக்குள் ஏதோ பேசி கொள்கின்றனர்.
பின்னர், அந்த பெண் தனது தலை முடியை பிடுங்கி பாதி சாப்பிட்ட உணவில் போட்டு விட்டு, உணவக நிர்வாகத்தை அழைத்து தங்களது பணத்தை திருப்பி கேட்கிறார். இந்த வீடியோ இணையத்தில் பதிவிடப்பட்ட சில மணி நேரத்திலே வைரலாக தொடங்கிவிட்டது.
இந்நிலையில், இந்த தம்பதியினர் செய்த காரியத்தை கவனித்த உணவகம் இது குறித்த சிசிடிவி காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.
மேலும், அந்த விடியோவை பகிர்ந்த உணவகம், நாம் யாரும் இப்படிப்பட்ட செயலை செய்யக்கூடாது என்றும் இது போன்ற மனிதர்களால் உணவகங்களின் நற்பெயர் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தம்பதியின் செயலுக்கு இணையத்தில் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.