உலகக் கிண்ணத் தொடரில் இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், தெலுங்கு நடிகை ஒருவர் அதுகுறித்து வெளியிட்டுள்ள கருத்து தற்போது வைரலாகி வருகின்றன.
இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்தில் எதிர்வரும் 19 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை நடைபெறுகிறது.
இந்த போட்டிக்கு இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் முன்னேறியுள்ள நிலையில், தெலுங்கு நடிகை ரேகா போஜ் சமூக ஊடகத்தில் தெரிவித்த கருத்து தற்போது வைரலாகி வருகிறது.
இன்ஸ்டாகிராமில் அவர்,”இந்தியா வெற்றி பெற்றால் விசாகப்பட்டினம் கடற்கரையில் நான் Streak செய்கிறேன்” என பதிவிட்டிருந்தார். Streak என்றால் ஒரு விளையாட்டு வெற்றியை கொண்டாடும் விதமாக நிர்வாணமாக ஓடுவது ஆகும்.
தொடர்ந்து, இவரின் பதிவுக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், இது அருவருக்கத்தக்க செயல் என பதிவிட்டு வருகின்றனர்.
மேலும், இது பிரபலத்திற்காக அந்த நடிகை இப்படி பதிவிடுவதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இவர் குறுப்படங்களில் நடித்து சில படங்களிலும் நடித்துள்ளார். இவரின் இன்ஸ்டாகிராமை வெறும் 6 ஆயிரம் பேரே பின்தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.